6. दोहे
(कंठस्थ)
1. करता था सो क्यों किया, अब कर क्यों पछिताय
बोया पेड बबूल का, आम कहाँ से खाय ।।
மக்கள் தவறான செயலை செய்த பிறகு வருத்தப்படுகிறார்கள். தவறான செயல்களைச் செய்து நல்ல பெயரைப் பெற முடியாது. சீமைக் கருவேல மரங்களை நடுபவர்கள் மாம்பழத்தை எப்படிச் சாப்பிட முடியும்? அதே போல், தவறான செயல்களை செய்துவிட்டு நற்பலன்களை பெற முடியாது. எனவே, எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பும், கவனமாகச் செய்ய வேண்டும் என்று கபீர்தாஸ் கூறுகிறார்.
(कबीरदास)
2. कस्तूरी कुंडल बसे, मृग ढूंढे बन माँहिं ।
ऐसे घटि-घटि राम है, दुनिया देखै नाहिं ।।
கஸ்தூரி மான் தன் தொப்புளிலிருந்து வரும் நறுமணத்தைத் தேடுவது போல, மனிதனும் தன்னில் இருக்கும் கடவுளை அறியாமல் வெளியே தேடுகிறான் என்று கபீர்தாஸ் கூறுகிறார் -
(कबीरदास)
3. न्हाये धोये क्या हुआ, जो मन मैल न जाय ।
मीन सदा जल में रहै, धोये बास न जाय ।।
எவ்வாறு மீன் தண்ணீரிலேயே வாழ்ந்தாலும், அதை கழுவிய பிறகும் அதன் துர்நாற்றம் வெளியேறாதோ அதேபோல், மனிதனுடைய மனதிற்குள்ளே இருக்கும் அழுக்கு, குளிப்பதாலோ, உடலை கழுவுவதாலோ நீங்காது என்று கபீர்தாஸ் கூறுகிறார்-
(कबीरदास)
4. गुरु गोविंद दोऊ खडे, काके लागौं पाँय ।
बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय ।।
குருவும், கடவுளும் நம் எதிரில் வந்து நின்றால், யாருடைய கால்களில் விழுவாய் என்று கபீர்தாஸ் கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் அவரே விளக்குகிறார். குரு நமக்கு கடவுளின் முக்கியத்துவத்தை விளக்கி, கடவுளை அடையும் வழியையும் காட்டுகிறார். எனவே குருவின் இடம் இந்த உலகில் எப்போதும் முதன்மையானது என்று கபீர்தாஸ் கூறுகிறார்.
(कबीरदास)
5. काम क्रोध मद लोभ की जौ लौं मन में खान ।
तौ लौं पंडित मूरखौं तुलसी एक समान ।।
மனிதனின் மனதில் காமம், கோபம், அகங்காரம் மற்றும் பேராசை ஆகியவை நிறைந்திருக்கும் வரை, ஞானி மற்றும் முட்டாள் என்ற வித்தியாசம் இல்லை, இரண்டும் ஒன்றுதான். எனவே, மனதில் இருந்து கெட்ட உணர்வுகளை அகற்ற வேண்டும் என்று துளசிதாஸ் கூறுகிறார்.
(तुलसीदास)
6. आवत ही हरषै नहीं नैनन नहीं सनेह ।
तुलसी तहां न जाइये कंचन बरसे मेह ।
ஒருவருடைய வீட்டில், தங்கமழையே பெய்தாலும், நம் வருகையால் அவருடைய மனதில் மகிழ்ச்சியும், கண்களில் அன்பும் இல்லையென்றால், அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று துளசிதாஸ் கூறுகிறார்.
(तुलसीदास)