9. दोहे
(कंठस्थ)
1. साधू ऐसा चाहिए, जैसा सूप सुभाय ।
सार सार को गहि रहै, थोथा देइ उड़ाय ।।
முனிவர் அல்லது துறவி அரிசி
பிடைக்கும் முறம் அல்லது சொளகு போல இருக்க வேண்டும். சொளகானது பிடைக்கும் போது, நல்லவற்றை
(அதாவது அரிசி போன்ற தானியங்களை) கீழே வைத்து கொண்டு, கெட்டவற்றை (அதாவது உம்மி போன்றவற்றை)
பறக்க விட்டு விடுகிறது. அதே போல் முனிவர்கள் தங்களிடம் உள்ள நல்ல குணங்களை அப்படியே
வைத்துக் கொண்டு, கெட்ட குணங்களை தூக்கி எறிய வேண்டும்.
(कबीरदास)
2. धीरे-धीरे रे मना, धीरे सब कछु होय ।
माली सींचै सौ घड़ा, ऋतु आए फल होय ।।
அனைத்து வேலைகளையும் மெதுவாக
மற்றும் பொறுமையாக செய்ய வேண்டும். அதே போல், செய்யும் அனைத்து வேலைகளுக்கும் மெதுவாக
தான் பலன் கிடைக்கும். தோட்டக்காரன் மரங்களுக்கு நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும், அதற்கான
காலம் வரும் போது தான் பழம் கிடைக்கும்.
(कबीरदास)
3. तरुवर फल नहिं खात हैं, सरवर पियहिं न पान ।
कहि रहीम पर काज हित, संपत्ति सँचहिं सुजान ।।
மரங்கள் தங்களுடைய பழங்களை சாப்பிடுவதில்லை, ஆறு போன்ற நீர்நிலைகள் தங்களுடைய தண்ணீரை குடிப்பதில்லை. அதே போல், பெருந்தன்மை கொண்ட
மனிதன் தனக்காக சம்பாதிக்காமல், பிறருக்கு உதவுவதற்காக சம்பாதித்து சொத்து சேர்க்க
வேண்டும் என்று ரஹீம் கூறுகிறார்.
(रहीम)
4. रहिमन देखि बड़ेन को, लघु न दीजिए डारि ।
जहाँ काम आवे सुई, कहा करे तरवारि।।
பணத்தால் அல்லது பலத்தால் அல்லது
வயதால் பெரியவர்களுக்கு மதிப்பளித்து விட்டு, சிறியவர்களை அலட்சியப் படுத்த கூடாது.
ஏனெனில், சில நேரங்களில் பெரியவர்கள் நமக்கு உதவி செய்ய இயலாத போது, சிறியவர்கள் மூலமாக
உதவி கிடைக்கக் கூடும். சிறிய ஊசி வேலை செய்யக்கூடிய இடங்களில், பெரிய வாள் அல்லது
கத்தியால் வேலை செய்ய இயலாது என்று ரஹீம் கூறுகிறார்.
(रहीम)
5. मुखिया मुख सों चाहिए, खान पान को एक।
पालै पोसै सकल अंग, तुलसी सहित विवेक ।।
ஒரு கூட்டத்தின் தலைவன் வாயைப்
போல இருக்க வேண்டும். வாய் தான் உண்ணும் மற்றும் குடிக்கும் பொருட்களை சேகரித்து உடலில்
உள்ள மற்ற பகுதிகளுக்கு விவேகத்துடன் அல்லது புத்திசாலித்தனத்துடன் பிரித்து கொடுக்கிறது.
அதே போல், ஒரு கூட்டத்தின் தலைவன் தனக்கு கிடைக்கும் பொருட்களை தன்னுடைய மக்களுக்கு
விவேகத்துடன் பிரித்து கொடுக்க வேண்டும் என்று துளசிதாஸ் கூறுகிறார்.
(तुलसीदास)
6. तुलसी मीठे वचन ते, सुख उपजत चहुँ ओर ।
बसीकरन यह मंत्र है, परिहरु वचन कठोर ।।
நாம் இனிமையான வார்த்தைகளை
பேசினால், நம்மை சுற்றிலும் நாலாபக்கமும், மகிழ்ச்சி உருவாகும். இதுவே மற்றவர்களை வசீகரிக்கும்
மந்திரம் ஆகும். கடுமையான வார்த்தைகள் பேசுவதை விட்டுவிட வேண்டும் என்று துளசிதாஸ்
கூறுகிறார்.