30 August 2022

Madhyama Patya Pusthak Poem .no. 6 दोहावली

 6. दोहावली

(कंठस्थ)

1. कस्तूरी कुंडल बसे, मृग ढूंढे बन माँहिं 

     ऐसे घटि-घटि राम है, दुनिया देखै नाहिं ।।

கஸ்தூரி மான் தன் தொப்புளிலிருந்து வரும் நறுமணத்தைத் தேடுவது போல, மனிதனும் தன்னில் இருக்கும் கடவுளை அறியாமல் வெளியே தேடுகிறான் என்று கவிஞர் கபீர்தாஸ் கூறுகிறார் -  

(कबीरदास)

 

2. गुरु गोविंद दोऊ खडे, काके लागौं पाँय 

     बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय ।।

குருவும், கடவுளும் நம் எதிரில் வந்து நின்றால், யாருடைய கால்களில் விழுவாய் என்று கபீர்தாஸ் கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் அவரே விளக்குகிறார். குரு நமக்கு கடவுளின் முக்கியத்துவத்தை விளக்கி, கடவுளை அடையும் வழியையும் காட்டுகிறார். எனவே குருவின் இடம் இந்த உலகில் எப்போதும் முதன்மையானது என்று கவிஞர் கபீர்தாஸ் கூறுகிறார். 

(कबीरदास)

3.  रहिमन धागा प्रेम का, मत तोडो चटकाय |

     टूटे से फ़िर ना मिले, मिले गाँठ परि जाय ।।

அன்பு என்னும் நூலானது மிகவும் மென்மையானது. இந்த அன்பென்னும் நூலை உண்ர்ச்சிவசத்தால் அவசரப்பட்டு, அறுத்து விட வேண்டாம். ஏனென்றால் எவ்வாறு ஒரு முறை நூல் அறுந்து விட்டால், பிறகு ஒட்ட வைப்பது கடினமோ, அதே போல், அன்பானவர்களுடன் கொண்ட பாசத்தை அறுத்து விட்டாலும், ஒட்ட வைப்பது கடினம். ஒருவேளை ஒட்ட வைத்தாலும், அதில் முடிச்சு இருக்க தான் செய்யும் என்று கவிஞர் ரஹீம் கூறுகிறார்.

(रहीम)

4.  विद्या धन उद्यम बिना, कहो जू पावै कौन |

   बिना डुलाये ना मिलै, ज्यौं पंखा की पौन ||

  நாம் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், கடினமாக உழைக்க வேண்டும். ஏனென்றால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல், கல்விச் செல்வத்தை பெற முடியாது. விசிறியை ஆட்டாமல், அசைக்காமல் கையில் வைத்திருந்தால், எப்படி காற்று வரும். காற்று வேண்டுமென்றால், விசிறியை அசைக்க வேண்டும், அதே போல், கல்விச் செல்வத்தை பெறுவதற்கு, கடினமாக உழைக்க வேண்டும் என்று கவிஞர் வ்ருந்த கூறுகிறார்.

(वृंद)

5.  हरि-सा हीरा छांड कै, करै आन की आस |

   ते नर जमपुर जाहिंगे, सत भाषै रैदास ||

கடவுள் வைரத்திற்கு இணையானவர். ஆனால் மக்கள் தங்களுடைய அகங்காரத்தினால், கடவுளை மறந்து விடுகிறார்கள். இப்படி கடவுளை மறக்கக்கூடிய மக்கள், நரகம் அல்லது யமபுரிக்கு தான் செல்வார்கள் என்பது கவிஞர் ரைதாஸின் சத்தியமான கருத்து ஆகும்.

(रैदास)

 

6. आवत ही हरषै नहीं नैनन नहीं सनेह 

     तुलसी तहां न जाइये कंचन बरसे मेह ।|

ஒருவருடைய வீட்டில், தங்கமழையே பெய்தாலும், நம் வருகையால் அவருடைய மனதில் மகிழ்ச்சியும், கண்களில் அன்பும் இல்லையென்றால், அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று துளசிதாஸ் கூறுகிறார்.

 (तुलसीदास)


FEBRUARY 2025 DBHPS CHENNAI PRAVEEN UTTARARDH EXPECTED QUESTION PAPER

  राष्ट्रभाषा प्रवीण उत्तरार्द्ध - 1 Time: 3 Hrs   RASHTRABASHA PRAVEEN UTTARARDH – 1   Marks: 100 1. संदर्भ सहित व्याख्या कीजिए : (5 ...